Jesus

ஆண்டவரின் வார்த்தைகளான “ஏற்றதுணையை உண்டாக்குவேன்” -ஆதி 2:18 என்ற வசனத்தின்படி, சமுதாய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்க,மிகவும் பிரபலமான தமிழ் செய்தி மற்றும் தற்கால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் தொலைக்காட்சி ஊடகமான சத்தியம் டெலிவிஷன் லிமிடெட், ஒற்றுமை நிறைந்த சமுதாயம் வளர்ந்து செழித்தோங்க செய்வதில் தனது சமுதாய கடமையை உணர்ந்து மேற்கொண்ட நீண்ட கால முயற்சியின் பலன் தான் “ஏற்றதுணை/ BEST COMPANION “

வேறுபட்ட மக்கள் நிறைந்த சமுதாயத்தில் உண்மையான ஒற்றுமை, முழுமையான வளர்ச்சி என்பதை கலாச்சாரம் மற்றும் மத சகிப்புத்தன்மைகளுக்கு மதிப்பு அளிப்பதன் மூலமே பெற முடியும். சமுதாயம் குடும்பங்களால் உருவாக்கப்படுகிறது. ஒற்றுமையான குடும்பங்களால் மட்டுமே ஒற்றுமையான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

ஒற்றுமையான குடும்பங்களை உருவாக்கவே “ஏற்றதுணை/ BEST COMPANION “ லாப நோக்கற்ற முறையில் திட்டமிடப்பட்டது. கர்த்தரில் பெயரால் அவர் மீது முழு விசுவாசத்துடன் இன்று திருமண உறவுக்காக வாழ்க்கைத் துணையைத் தேடி வருபவர்களுக்குப் பொருத்தமான ஆத்ம துணையை ஏற்படுத்திக் கொடுக்கும். தங்களுக்கு திருமணம் தொடர்பான பல்வேறு சேவைகளையும் வழங்கும். தகுதியான மணமகன்கள் மற்றும் மணமகள்கள் பற்றிய தகவல்கள், அவர்களை பற்றிய சான்று ஆவணங்கள், தொடர்பு கொள்ளவேண்டிய நெருங்கிய உறவினர்கள் பற்றிய விவரங்கள் வழங்கப்படும்.அனைத்துத் தேவைகளுக்கும் மிக குறைந்த பதிவு கட்டணம் மட்டுமே செலுத்தவேண்டும்.

திருமணம் தொடர்பான மேலதிக சேவைகளையும் வழங்குகிறோம். திருமண நிகழ்வுகளை திட்டமிடுதல் மற்றும் திருமண வாழ்விற்கான ஆலோசனைகள், உங்கள் பொருளாதார வசதிகளுக்கேற்ப பிற நிகழ்வுகளை அமைத்தல் என எல்லாவற்றையும் நீங்கள் என்றும் உங்கள் நினைவில் கொண்டு மகிழும் வகையில் அமைத்துத் தருவோம்.

இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள் ? ஆண்டவருடைய கிருபையால் உங்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தரக்கூடிய திருமண மணி உங்களது இல்லங்களில் எங்களது “ஏற்றதுணை/ BEST COMPANION “ திருமண தகவல் மையத்தின் மூலம் ஒலிக்கட்டும்.